

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவுநாளை யொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனதுட்விட்டர் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்ன மலைக்கு தேசமே அஞ்சலி செலுத்துகிறது. அவர் ஒப்பற்றதேசபக்தர். நிர்வாக சாதுர்யம் மிக்க, நற்குணம் கொண்டஆட்சியாளர். அவரது வீரமும், தியாகமும் அனைத்து இந்தியர்களுக்கும் ஊக்கமளிக்கும்” என்று தெரி வித்துள்ளார்.
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாமக சார்பில் கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டா லின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறு வனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் வாயிலாக வும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.