அண்ணாமலை செல்வது பாத யாத்திரையா, பஸ் யாத்திரையா? - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி

அண்ணாமலை செல்வது பாத யாத்திரையா, பஸ் யாத்திரையா? - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி
Updated on
1 min read

காரைக்குடி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா? பஸ் யாத்திரையா?’’ என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி எழுப்பினார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் இதுவரை 2.24 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி முடிந்த பின்னரே, எத்தனை பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தனர் என்பது தெரியவரும். மேலும், விண்ணப்பங்களை பதிவு செய்ய போதுமான காலஅவகாசம் உள்ளது.

மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜகவினர், முதல்வர் மீது சில குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அவர்களது பாராட்டுகளை திமுக அரசு எந்த காலத்திலும் எதிர்பார்க்காது. அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா? பஸ் யாத்திரையா? என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விலைவாசியை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், காய்கறிகளை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய சொல்வது நல்ல ஆலோசனைதான். ஏற்கெனவே அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு அங்காடிகளில் தனியாரைவிட குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 67 பண்ணை பசுமை கடைகள் மற்றும் வாகனங்கள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன என பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in