மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | கோப்புப் படம்
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | கோப்புப் படம்

ஸ்டாலின் தலைமையில் ஆக.5-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Published on

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 05-08-2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in