இரட்டை இலை சின்னம் விவகாரம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு
Updated on
1 min read

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆயத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்  டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஈ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த மனுவில், "சின்னம் விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலனை செய்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சின்னம் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை வழங்கியபோதே, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தினகரன் கூறியிருந்தார். அவரது அறிவிப்பை அடுத்து உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in