கோயம்பேடு சந்தையில் ரூ.160-ல் நீடிக்கும் தக்காளி விலை

கோயம்பேடு சந்தையில் ரூ.160-ல் நீடிக்கும் தக்காளி விலை
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.160 என்ற அளவில் நீடித்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.160-க்கும், சில்லறை விலையில் கிலோ ரூ.180-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்ந்ததில் இருந்து தக்காளி வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. அப்படியேதக்காளி வாங்க வந்தாலும் குறைந்த அளவில் வாங்கிச் செல்கின்றனர். 2 பேர், 3 பேர் சேர்ந்து ஒரு கிலோ வாங்கிச் செல்லும் நிலை இருந்து வருகிறது என்று இச்சந்தை சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் வழக்கம்போல கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இருந்து இன்னும் தக்காளி வரத்து அதிகரிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் பிற பகுதிகளில் இருந்து தக்காளி ஓரளவு கொண்டுவரப்பட்டு, சென்னை மாநகரத் தக்காளி தேவை சமாளிக்கப்படுகிறது. தக்காளி விலை குறைய இன்னும் ஒரு மாதமாவது ஆகும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in