‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை: ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கல்

‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா அம்பத்தூரில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அலுவலகம் சார்பில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இபிஎஃப்ஓ அறங்காவலர்கள் மத்திய வாரியத்தின் உறுப்பினர் கே.இ.ரகுநாதன், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் பங்கஜ் மற்றும் ஓய்வூதிய ஆணை பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள்.

Updated on
1 min read

சென்னை: ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.

மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம், 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதன்படி, பிரேக்ஸ் இந்தியா, எம்பீ டிஸ்டில்லரீஸ், எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளை, லூகாஸ் டிவிஎஸ், ஐயப்பா என்டர்பிரைசஸ், வீல்ஸ் இந்தியா, வில்கார், ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரி, கோஸ்டல் ஸ்டீல்ஸ், என்ரிக்கா என்டர்பிரைசஸ், கோனே எலிவேட்டர் இந்தியா, ஏவிஏ சோலையில் ஹெல்த்கேர், அமால்கமேஷன் ரெப்கோ ஆகிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர்.

அவர்களுக்கு, அம்பத்தூரில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அலுவலகம் சார்பில், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை அன்றைய தினமே வழங்கப்பட்டது.

இபிஎஃப்ஓ அறங்காவலர்கள் மத்திய வாரியத்தின் உறுப்பினர் கே.இ.ரகுநாதன், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் பங்கஜ் ஆகியோர் ஓய்வூதிய ஆணைகளை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கினர்.

மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு பிரயாஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற சம்பந்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அம்பத்தூரில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு ஆணையர்-1 ஜி.ஆர்.சுசிந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in