Published : 22 Nov 2017 09:24 AM
Last Updated : 22 Nov 2017 09:24 AM

‘தி இந்து எட்ஜ், வெற்றிக்கொடி, ஸ்மார்ட் நிறுவனம் சார்பில் மாநில அளவிலான நீட் மாதிரி தேர்வு: நவம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

‘தி இந்து - எட்ஜ்', ‘தி இந்து - வெற்றிக்கொடி' மற்றும் ஸ்மார்ட் ட்ரெயினிங் ரிசோர்சஸ் இந்தியா ஆகியவை சேர்ந்து டாக்டராகும் கனவுடன் பிளஸ் 2 படித்துவரும் மாணவ, மாணவிகளுக்கு நீட் மாதிரி தேர்வை வரும் ஜனவரி 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகின்றன.

சுமார் 40 இடங்களில் நடைபெறும் இந்த மாதிரி தேர்வு, நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாகவும், தைரியம், அனுபவத்தை வழங்குவதாகவும் இருக்கும். நீட் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்களை அமைக்கும் சிறப்பு குழுவினரால் இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாதிரி நீட் தேர்வுக்கான கட்டணம் ரூ.750 (ஜிஎஸ்டி தனி). இத்தேர்வின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு மாநில அளவில் கிடைக்கும் ரேங்க்கை முன்கூட்டியே தோராயமாக மதிப்பிட முடியும். பலம், பலவீனங்களை ஆராய்ந்து நேருக்கு நேர் கலந்தாய்வு செய்யப்படும். 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் டெஸ்ட் தாள்கள் இலவசமாக வழங்கப்படும். முதல் 100 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் www.smartneet.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, வரும் நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். தங்கள் பள்ளி வளாகத்திலேயே இத்தேர்வை நடத்த விரும்புபவர்கள் 7401658483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x