

தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் போன்ற பெயர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து வருவதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமை களுக்கான பெற்றோர்கள் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் மாநில கல்வி, மெட்ரிகுலேஷன், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என 4 விதமான கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்தன. சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 4 விதமான கல்வி வாரி யங்களும் கலைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு பொதுக் கல்வி வாரியம் என்ற பெயரில் ஒரே கல்வி வாரியம்தான் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம், ஒரே விதமான பாடப் புத்தகங்கள், ஒரே விதமான தேர்வு முறைதான் தற்போது அமலில் உள்ளன.
இந்நிலையில், அரசுப் பள்ளி களைவிட தங்கள் பள்ளிகள் சிறந் தது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவ தற்காக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரிலும், ஆங்கிலோ இந்தி யன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகள் என்ற பெயரிலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
அனைவருக்கும் ஒரேவிதமான கல்வி முறையே அமலில் உள்ள சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் இன்னும் மெட்ரிகுலேஷன், ஆங் கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என்ற பெயர்களைப் பயன் படுத்துவது விதிமுறைகளுக்கு முரணானது. ஆகவே, தனியார் பள்ளிகளின் பெயர்களில் உள்ள மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பெயர்களை நீக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வெங்கடேசன் கோரியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி, ‘‘மனுதாரரின் கோரிக்கை தற்போது அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஆகவே பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை ஒரு வார காலத் துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.