Published : 01 Aug 2023 04:00 AM
Last Updated : 01 Aug 2023 04:00 AM

கோவை - சேலம் இடையிலான மெமு ரயில்கள் ஒரு மாதம் ரத்து

கோவை: கோவை - சேலம் இடையிலான மெமு ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை-சேலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவையிலிருந்து காலை 9.05 மணிக்கு சேலம் புறப்பட்டுச் செல்லும் மெமு ரயில் (எண்: 06802),

சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் மெமு ரயில் (எண்:06803) ஆகியவை இன்று (ஆக.1) முதல் வரும் 31-ம் தேதி வரை ஒரு மாதம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x