Published : 01 Aug 2023 06:12 AM
Last Updated : 01 Aug 2023 06:12 AM
சென்னை: ரத்ததானம் மற்றும் திருமணத்துக்கு முன்பு முழு உடல் பரிசோதனை அவசியமென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த தமிழக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் கே.எஸ்.டி.சுரேஷ் (50) நேற்று காலமானார்.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறையின் இணை இயக்குநராக இருந்தவர் மருத்துவர் கே.எஸ்.டி.சுரேஷ். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் நேற்று உயிரிழந்தார். சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்வேறு நகராட்சிகளில் நகர நல அலுவலராகவும், செய்யாறு, வேலூர் உள்ளிட்ட சுகாதாரமாவட்டங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பணியாற்றிய காலத்தில் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டுமென்றும், திருமணத்துக்கு முன்பு மணமக்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
அதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு, திருமண நிகழ்வில் பங்கேற்று சான்றிதழை வழங்கி மணமக்களை வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT