Published : 20 Nov 2017 08:48 AM
Last Updated : 20 Nov 2017 08:48 AM

அம்மா குடிநீர் விற்பனை மையம்: விரைவில் தொடங்க பயணிகள் கோரிக்கை

மக்கள் மத்தியில் தற்போது பாட்டில் குடிநீர் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வெளியூர் செல்லும் மக்கள், தண்ணீர் பாட்டிலை தவற விடுவதில்லை. இதனைப் பயன்படுத்தி குடிநீர் பாட்டில் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. மினரல் வாட்டர் என்ற பெயரில் இந்த குடிநீர் 1 லிட்டர் ரூ.20-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட அம்மா குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாம்பரம் நகராட்சி சார்பில் நடத்தப்படும் அண்ணா பேருந்து நிலையத்தில் மட்டும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை. நிலையம் தொடங்கி 5ஆண்டுகள் ஆகியும், இதுநாள்வரை ‘அம்மா’ குடிநீர் விற்பனை மையம் ஏற்படுத்தப் படவில்லை. இதனால், பயணிகள், ரூ.20-க்கு விற்பனையாகும் தனியார் நிறுவன குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, சானடோரியம் பேருந்து நிலையத்தில் ‘அம்மா’ குடிநீர் விற்பனை மையம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x