மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா

மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா
Updated on
1 min read

சோழப் பேரரசர் ராசராச சோழனின் மகனும், அவருக்கு பின்னால் சோழப் பேரரசை தென்கிழக்கு ஆசியா வரை விரிவாக்கம் செய்தவருமான மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழா வருகிற 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவ்விழா நடைபெறுகிறது.

வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கருத்தரங்கத்துடன் தொடங்கும் இந்த விழாவின் முதல் நாளில் நூல்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விழா கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள குருகைகாவலப்பர் கோயிலில் நடைபெறுகிறது. மாலையில் இசை, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, காலை 8 மணிக்கு தஞ்சையில் இருந்து தொடங்கும் தொடர் தீபச்சுடர் ஓட்டத்தில், எழுத்தாளர் பாலகுமாரன் தீபத்தை ஏற்றி வைக்கிறார். மேலும் மாலையில் நடைபெறும் வரலாற்று உரை நிகழ்ச்சியிலும் அவர் பேசுகிறார். விழாவில் ராசேந்திர சோழன் குறும்படம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவை வெளியிடப்படுகின்றன. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட மாளிகை மேட்டிலும், மாமன்னன் ராசேந்திர சோழன் அரங்கத்திலும் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in