சைபர் க்ரைம் குற்றப்பிரிவு விரிவாக்கத்துக்கு ரூ.9.28 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கெனவே உள்ள அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் உள்ள 8 இருக்கைகள் இருக்கைகளாகவும், புதியதாக கூடுதல் 15 பணியாளர்களை (மூன்றாண்டுகளுக்கு ரூபாய் 9.28 கோடி) ஒப்பளிப்பு செய்யவும். முதற்கட்டமாக இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வரால் 2023-24ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட 9.28 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in