

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று (நவம்பர் 7) 63-வது பிறந்தநாள். சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடாமல், ஆவடியில் மருத்துவ முகாமை நடத்தி வருகிறார்.
அவர் பிறந்தநாள் கொண்டாடாவிட்டாலும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர்கள், பேனர்களில் தாங்கள் போற்றும் தலைவர்களை நடிகர்களை வாழ்த்தி எழுதுவது தமிழர்களுக்கு கைவந்த கலை.
கமலை இன்று போஸ்டரில் முதல்வராக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதோ உங்கள் பார்வைக்காக சில போஸ்டர்கள். இந்தப் புகைப்படங்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை பகுதியில் எடுக்கப்பட்டவை.