

வெங்கல் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பொதுமக்கள் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை யடுத்து மாவட்ட சுகாதாரத் துறை குடிநீர் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள வெங்கல் பகுதி மக்களுக்கு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இச்சூழலில், கடந்த சில நாட்களாக வெங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் சிலருக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் வெங்கல் அம்பேத்கர் நகர் கம்பர் தெரு, காந்தி தெருவைச் சேர்ந்த சுவாமி நாதன்(65), காசிநாதன்(60), நதியா (24), அபிராமி(35), ஹரிஹரன்(14), பிரேமா(32), புருஷோத்தமன்(4), ஹரி(4) ஆகிய எட்டு பேருக்கு சனிக்கிழமை திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இதில் சுவாமிநாதனின் உடல் நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அரசு தொற்று நோய் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு குடிநீரில் கழிவு நீர் கலந்ததுதான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, வெங்கல் பகுதியில் முகாமிட்ட மாவட்ட சுகாதார துறையினர் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை களை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் சுற்றுப் புறத்தை தூய்மைப்படுத்தி, குடி நீர்த் தொட்டி மற்றும் குழாய் களை ஆய்வு செய்தனர்.
மேலும், வெங்கல் பகுதிவாசி களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் மாதிரியை சென்னை யில் உள்ள முதன்மை நீர் பகுப் பாய்வகத்துக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.