

சென்னை: தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 107 டிகிரி, மதுரை மாநகரில் 105 டிகிரி, திருச்சி, நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி, புதுச்சேரி, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி, காரைக்கால், அதிராமபட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.