

"ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" இப்படி ஒரு பதிவை அதிமுக எம்.பி.யும் மூத்த தலைவருமான மைத்ரேயன் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வாத விவாதங்களை சூடாக்கியுள்ளது.
இந்நிலையில் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் மைத்ரேயனை தொடர்பு கொண்டோம்.
நாம்: உங்களுடைய ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தோம். அதில், கூறியிருப்பது தொடர்பாக உங்கள் விளக்கம்?
மைத்ரேயன்: என் மனதில் இருப்பதையே ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்; இதற்கு மேல் ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்.
நாம்: இல்லை.. இரட்டை இலை சின்னம் விவகாரம் நிலுவையில் இருக்கும்போது இத்தகைய கருத்து ஏதாவது பின்னடைவை ஏற்படுத்துமா?
மைத்ரேயன்: நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை. வேண்டும் என்றால், எனது கருத்து தொடர்பாக நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கருத்து கேட்டுக் கொள்ளுங்கள்.
நாம்: நன்றி.