Published : 31 Jul 2023 06:07 AM
Last Updated : 31 Jul 2023 06:07 AM
சென்னை: சென்னையை சுற்றி மதுரவாயல், கோயம்பேடு, வானகரம், கொளத்தூர், அம்பத்தூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக இயங்கி வரும் மணல் சேமிப்பு கிடங்குகளை உடனேதடை செய்ய வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக புவியியல், சுரங்கத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
முறைகேடாக மணல் சேமிப்பு: மணலை இரண்டாம் விற்பனை செய்வதற்காக, சென்னையை சுற்றியுள்ள மதுரவாயல், கோயம்பேடு, வானகரம், கொளத்தூர், அம்பத்தூர், அத்திப்பட்டி, செங்குன்றம் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியின்றி, முறைகேடாக மணல் சேமிப்பு கிடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கலப்பட மணல்: குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஆற்று மணல் ஆகியவற்றை எடுத்து வந்து இங்கு இருப்பு வைத்து, அத்துடன் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் சிலிக்கா மணல், கடல் மணல், குவாரி டஸ்ட் ஆகியவற்றை கலந்து விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில், மணல் சேமிப்பு கிடங்குகளில் முற்றிலும் தரமற்ற எம்.சாண்ட் மணலை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வரும் மணல் சேமிப்பு கிடங்குகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT