Published : 31 Jul 2023 06:12 AM
Last Updated : 31 Jul 2023 06:12 AM
சென்னை: விரைவுப் போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகசிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதிகொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும்இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் நாளை(ஆக. 1) சென்னையில் இருந்துதிருவண்ணாமலைக்கும், ஆக. 2-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும்.கோயம்பேட்டில் இருந்துநாளை பிற்பகல் 3, 4, 5 மணியளவிலும், திருவண்ணாமலையில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை 3, 4, 5 மணியளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றை tnstc.in, tnstc செயலிகள் மூலம் முன்பதிவு செய்யலாம்.கூடுதல் தகவலுக்கு 9445014452,63, 24, 16 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT