Published : 31 Jul 2023 06:12 AM
Last Updated : 31 Jul 2023 06:12 AM

கோயில் வருமானம் வீணடிக்கப்படுகிறது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் முதலாளித்துவ பாசிச மனநிலை பிரதிபலிக்கிறது.

வருமானம் குறைவாக உள்ளகோயில்களில், பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்கூட கொடுக்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை கூறுவது மனிதாபிமானமற்ற செயல். அதிக வருமானம் உள்ள கோயில்களின் வருமானம் ஆடம்பரத்துக்கும் அரசியல் செய்வதற்கும் வீணடிக்கப்படுகிறது. எங்கோ இருக்கும் அதிகாரியின் காருக்கு பெட்ரோல் போட கோயில் நிதியிலிருந்து செலவழிக்கபடுகிறது. இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.

கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் போதிய வருமானத்தை, தகுதி, திறமை, அனுபவம் ஆகியவற்றை கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x