Published : 21 Nov 2017 09:04 AM
Last Updated : 21 Nov 2017 09:04 AM

கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

கூடங்குளத்தில் உள்ள 2-வது அணு உலையில் 108 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அணு உலையில் தற்போது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

2-வது அணு உலையில் ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த பராமரிப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலுடன் கடந்த 16-ம் தேதி காலை 9.05 மணிக்கு அணுக்கரு பிளவு தொடர்வினை தொடங்கியது. தொடர்ந்து நேற்று பகல் 1.25 மணிக்கு 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக, அணுமின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x