Published : 02 Jul 2014 10:53 AM
Last Updated : 02 Jul 2014 10:53 AM

பருவநிலை மாற்றம் குறித்த நகல் அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து

பருவநிலை மாற்றம் குறித்து தமிழக அரசு சமீபத்தில் வெளியிட் டுள்ள நகல் அறிக்கை ஏற்கத்தக் கது அல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

தமிழக அரசு மற்றும் ஜெர்மன் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நீர் மேலாண்மை, கடலோரப் பாது காப்பு, விவசாயம், காடு மற்றும் பல்லுயிர், ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப் புற வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி நகல் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. இந்த நகல் அறிக்கை பற்றிய விவாத கருத்தரங்கத்தை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், பொதுக் கொள்கைக் கான இந்திய மையம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நடத்தியது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நகல் அறிக்கை குறித்து ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதாவது:

அரசின் அறிக்கையில் பருவநிலை மாற்றம் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும், மணல் கொள்ளை, சுனாமி தாக்குதலுக்குப் பின் கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு அரசு துறைகளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அமலில் உள்ள திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிப் புதிய நகல் அறிக்கையை அரசு மீண்டும் கொண்டுவரவேண்டும்.

தற்போது வெளியிடப்பட்ட நகல் அறிக்கையில் உள்ள பருவநிலை திட்டங்களை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் புதிய நகல் அறிக்கை தயார் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x