சென்னை | விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை | விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக்க வந்த இலங்கையை சேர்ந்த சிவகஜன்லிட்டி (43) என்ற பெண் பயணி பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, சுங்கச்சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இருவரின் உடல்களையும் போலீஸார் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் இரு பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in