Published : 28 Jul 2023 06:07 AM
Last Updated : 28 Jul 2023 06:07 AM

90 வயது முதியவரின் புகாருக்கு உடனடி நடவடிக்கை: காணாமல் போன கிரைய பத்திரம் கிடைக்க உதவிய காவல் ஆணையர்

சென்னை: 90 வயது முதியவரின் புகார் மீது போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அவர் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன் (90). இவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுர அடியில் குடியிருப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த குடியிருப்பு திருவான்மியூரில் உள்ளது. 1995 நவம்பர் 20-ம் தேதி திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இவ்வீட்டுக்கான கிரையப் பத்திரம் கடந்த மாதம் 17-ம் தேதி தொலைந்துவிட்டது.

இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ராஜகோபாலன் புகார் அளித்தார். அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதை அறிந்தகாவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் முதியவர் ராஜகோபாலனுக்கு உதவி செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, காணாமல் போன கிரையப் பத்திரத்தை தேடும்பணியை போலீஸார் தீவிரப்படுத்தினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் கண்டறிய முடியாத சான்றிதழ் (Non- traceable Certificate) போலீஸ் சார்பில் வழங்கப்பட்டது. இதைஅடிப்படையாக வைத்து ராஜகோபாலன் புதிதாக கிரையப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு இந்த சான்றிதழ் உதவியாக இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் போலீஸாருக்கு மனதார நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x