Published : 08 Nov 2017 02:46 PM
Last Updated : 08 Nov 2017 02:46 PM

சார்பு இல்லாத தி இந்து தமிழ் நாளிதழ்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

'தி இந்து' தமிழ் நாளிதழ் அரசியல் சார்பற்று வால்பிடித்து செல்லாத ஏடு என்றும், நடுப்பக்கக் கட்டுரையின் அம்சங்களையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதுரையில் நடந்த கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கருப்பு தினமாக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் கடைபிடித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் மாவட்டம் முழுவதும் கருப்புதின கண்டனக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பணம்திப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சுட்டிக்காட்டி பேசினார்.

அப்போது அவர் 'தி இந்து' தமிழ் நாளிதழைக்  குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார். அதிலுள்ள நடுப்பக்க கட்டுரையின் அம்சங்களை குறிப்பிட்டு மேற்கோள் காட்டி பேசினார்.

அவரது பேச்சு வருமாறு: ''இன்று காலையிலே வெளி வந்திருக்கக்கூடிய 'தி இந்து' தமிழ் பத்திரிகை, அது பொதுவான பத்திரிகை என்பது உங்களுக்கு தெரியும். இது எந்தக் கட்சியையும் சார்ந்த பத்திரிகை அல்ல, யாருக்கும் வால்பிடிக்கிற, யாரையும் சார்ந்து நிற்கிற, துதிபாடுகிற பத்திரிகை அல்ல.

அந்த ' தி இந்து’ தமிழ் பத்திரிகையின் நடுப்பக்கத்தில் தலையங்கம், மிகப் பெரிய கட்டுரை வந்துள்ளது. அதன் தலைப்பு என்ன தெரியுமா? பணமதிப்பு நீக்கம் கற்றுத்தந்த மறக்க முடியாத பாடம். அதில் அந்த கட்டுரையில் அவர்கள் என்ன சொல்கிறார்கள்.

திருப்பூரை சேர்ந்த உபதொழில் செய்து வரும் முருகேசனிடத்தில் பத்து பேர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறார். பணமதிப்பு நீக்கம் காரணமாக அவருடைய தொழில் முடங்கிவிட்டது. வருமானம் பாதிக்கப்பட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

திருப்பூரில் கிட்டத்தட்ட 1200 உப தொழில் சார்ந்த சிறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் மீள முடியாத அளவுக்கு அடி வாங்கி வருகிறது. தொழில் முனைவோராக இருந்த முருகேசன் மீள முடியாமல் நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இதை நான் சொல்லவில்லை 'தி இந்து' தமிழ் சொல்கிறது. ஆதாரpபூர்வமாக சொல்கிறது. ஆதாரத்தோடு பேரோடு, ஊரோடு விலாசத்தோடு சொல்கிறார்கள்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x