குழந்தைகளுக்கான ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது: ஆக. 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகளுக்கான ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது: ஆக. 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

சென்னை: மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதை வழங்குகிறது.

இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கிறது. விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிச. 26-ம் தேதி 'வீர் பால் திவாஸ்' என்று அறிவிக்கப்படுவார்கள்.

இந்த விருதை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ‘https://awards.gov.in/’ என்ற இணையதளத்தில் வரும் ஆக. 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in