தென்மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் ஆண்களை மிஞ்சிய பெண் வாக்காளர்கள்

தென்மாவட்ட மக்களவைத் தொகுதிகளில்  ஆண்களை மிஞ்சிய பெண் வாக்காளர்கள்
Updated on
1 min read

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 18 தொகுதிகளில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக தென்மாவட்டத்தின் பல தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடந்தது. மூன்றே மாதங்களில் 13.62 லட்சம் வாக்காளர்கள், தங்கள் பெயரை பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதனால், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 கோடியை எட்டியது. இதில், 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570 பேர் பெண்கள். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 13 ஆயிரத்து 333. முதல்முறையாக ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

வாக்காளர் பட்டியலில் மட்டுமின்றி, வாக்குப்பதிவிலும் இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி (தனி), தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை போன்ற தொகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல பெரம்பலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட மத்திய தமிழக தொகுதிகளிலும் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதமே அதிகம்.

ஆனால், வடதமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி தவிர மற்ற தொகுதிகளில் ஆண்களின் வாக்குகள்தான் அதிகம் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் பெரும்புதூர், காஞ்சிபுரத்தில் பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவா கவே இருக்கிறது. தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டும் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை அறிய, மாநகராட்சி ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட்ட திருநங்கைகள், வாக்களிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. தமிழ கத்தில் மொத்தம் 3,349 திருநங்கை கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் 419 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மத்திய சென்னை, பெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 தொகுதி களில் ஒரு திருநங்கைகூட வாக்களிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in