Published : 26 Jul 2023 06:34 AM
Last Updated : 26 Jul 2023 06:34 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதுல்யாஅசிஸ்டட் லிவிங் பிரைவேட் லிமிடெட்என்ற நிறுவனம் சார்பில் பிரெட்ரிக் அந்தோணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்களது நிறுவனம் சார்பில் பல்லாவரத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறோம்.
இதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம். எங்கள் இல்லத்தில் முதியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 150 பேர் உள்ளனர்.ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குமிக்க சிலர் அவ்வப்போது எங்களுக்கு தேவையற்ற இடையூறுகளையும், பிரச் சினைகளையும் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை 9-ம் தேதி பல்லாவரம் போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்'' என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று நடத்தப்படும் முதியோர் இல்லங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யவோ, மிரட்டல் விடுக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
இந்த சட்டத்தின்படி முதியோரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வேண்டியது போலீஸாரின் கடமை. எனவே, சம்பந்தப்பட்ட முதியோர் இல் லத்துக்கு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்யும் நபர்கள் மீது போலீஸார் உடனடியாக தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவி்ட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT