

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 85-வதுபிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் இணைந்து திண்டிவனத்தில் நேற்றுகொண்டாடினார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின்பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,“85-வது பிறந்த நாள் காணும் ராமதாஸுக்கு வாழ்த்துகள். இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்க தங்களது உழைப்பு பயன்படட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ராமதாஸ் நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி. கே. கணேஷ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.