

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செயலியில் டிக்கெட் சேவையை பயனர்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில்நுட்பக் குழு பணியாற்றி வந்த நிலையில், பயனர்கள் அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று தளங்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் வசதிக்காக, முக்கிய ரயில் நிலைங்களில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஐஆர்சிடிசி தளம் மீண்டும் செயலபடத் தொங்கியது.