உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 19-வது ஆண்டு விழா: கேக் வெட்டி கொண்டாடிய நீதிபதிகள்

உயர் நீதிமன்றக் கிளை 19-வது ஆண்டு விழாவை ஒட்டி கேக் வெட்டும் நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்.
உயர் நீதிமன்றக் கிளை 19-வது ஆண்டு விழாவை ஒட்டி கேக் வெட்டும் நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்.
Updated on
1 min read

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின்19-வது ஆண்டு விழாவையை நீதிபதிகள் கேக் வெட்டி கொண்டாடி சிறப்பித்தனர்.

மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை 2004 ஜூலை 24-ல் தொடங்கப்பட்டது. இன்று 20-வது ஆண்டில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அடி எடுத்து வைக்கிறது. அதன் 19-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் நீதிபதிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நீதிபதிகள் எம்.நிர்மல் குமார், ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.முரளிசங்கர், பி.புகழேந்தி, எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், டி.பரத சக்கர வர்த்தி, பி.வடமலை, பதிவாளர்கள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், பாஸ்கரன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in