நீதிமன்றங்களில் படம் வைக்க கட்டுப்பாடா? - திருமாவளவன் கண்டனம்

நீதிமன்றங்களில் படம் வைக்க கட்டுப்பாடா? - திருமாவளவன் கண்டனம்
Updated on
1 min read

திருநெல்வேலி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

புதிய இந்தியாவை கட்டமைத்ததோடு, அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதற்காகவே அம்பேத்கர் படம் நீதிமன்றங்களில் வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in