Published : 12 Jul 2014 09:45 AM
Last Updated : 12 Jul 2014 09:45 AM

அடுத்த பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட தயாரா? - அமைச்சர் வைத்திலிங்கம் சவால்

சட்டசபையில் வெள்ளிக் கிழமை ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் பேசும்போது, “எங்களுக்கு ஏற்றம் தந்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் இதய தெய்வம் கேப்டனுக்கு வணக்கம்” என்று கூறி பேச்சை தொடங்கினார்.

அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் உங்களுக்கு 3-வது இடம் கிடைத்தது. சில தொகுதிகளில் டெபாசிட் போனது. இதைத்தான் உறுப்பினர் ஏற்றம் என்று கூறுகிறாரா?” என்று கேட்டார்.

உறுப்பினர் வெங்கடேசன்:

நாங்கள் இந்தத் தேர்தலில் நோட்டீஸ் கொடுத்து ஓட்டுக் கேட்டோம். நீங்கள் என்ன கொடுத்து ஓட்டுக் கேட்டீர்கள்?

அமைச்சர் வைத்திலிங்கம்:

உங்கள் தலைவரின் தகுதி என்னவென்று இத்தேர்தலில் தெரிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் உங்களால் தனித்துப் போட்டியிட முடியுமா? தனித்து நின்று ஒரு தொகுதியில் ஆயிரம் ஓட்டாவது வாங்க முடியுமா? இனிமேல் மக்கள் உங்களை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

உறுப்பினர் வெங்கடேசன்:

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைத் தவிர யாரும் தொடர்ந்து ஆண்டதில்லை.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்:

தனித்துப் போட்டியிட தயாரா? என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு, பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல இருக்கிறது உங்களது பதில். தனித்துப் போட்டியிட தயாரா? என்று கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள் என்றார்.

அடுத்த தேர்தலில் உங்களால் தனித்துப் போட்டியிட முடியுமா? தனித்து நின்று ஒரு தொகுதியில் ஆயிரம் ஓட்டாவது வாங்க முடியுமா? இனிமேல் மக்கள் உங்களை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x