Published : 18 Nov 2017 10:08 AM
Last Updated : 18 Nov 2017 10:11 AM
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பேர் பிரமாண பத்திரம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை ஆணையம் சேப்பாக்கம் கல்சா மகாலில், முதல் தளத்தில் இயங்கி வருகிறது.
இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் 70 பேர் புகார் அளித்திருப்பதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பிரமாண பத்திரம் வழங்கியவர்களில் ஒருவரான திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன், வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!