படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

மணிப்பூர் கொடூரம் | சென்னையில் கனிமொழி தலைமையில் நடந்த திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

Published on

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

“மனித இனத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறி, தனது வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரைப் பலிகொடுத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

மிகப்பெரும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவரும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பதற்கும் நாம் அனைவரும் சேர்ந்து உதவிட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், தமிழரசி ரவிக்குமார், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு, மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன், செயலாளர் ஹெலன் டேவிட்சன், இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணிச் செயலாளர் நாமக்கல் ராணி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்” என இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in