‘ஒழுங்காக இல்லையென்றால் துறையை மாற்றி விடுவேன்’ - அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப் படம்
உதயநிதி ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘ஒழுங்காக இருங்கள்; இல்லையென்றால் துறையை மாற்றிவிடுவேன்’ என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “234 தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்பது தான் முதல்வரின் விருப்பம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை முதல்வர் கூறியதை போல் உருவாக்க வேண்டும். இன்று வேலை வாய்ப்பினை பெற்றுள்ள நீங்கள், நாளை100 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒழுங்காக இருங்கள். இல்லையென்றால் துறையை மாற்றிவிடுவேன் என்று முதல்வர் தெரிவித்தார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in