

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் இறந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு உதவி செய்வது போதாது என்றும், இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர் நகரில் வசித்து வந்த மணிமேகலை(8), யுவஸ்ரீ(8) என்ற இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பாவனா, யுவஸ்ரீ மற்றொரு சிறுமி மூவரும் வெளியே தெருவில் விளையாடச்சென்றனர். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் வீட்டருகில் மின் இணைப்பு பெட்டி இருக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர்.
மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் மூன்றாவதாக பின்னால் வந்த மாணவி பின் வாங்கியதால் மின்சாரம் பாயாமல் தப்பித்தார்.
மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.