Published : 21 Jul 2023 06:24 AM
Last Updated : 21 Jul 2023 06:24 AM
சென்னை: சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளாகத்தில், சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா தங்கும் விடுதிகளின் அறைகள் முன்பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு அலுவலகத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத் துறை,தமிழகம் முழுவதும் 28 ஓட்டல்களை நிர்வகித்து வருகிறது. இவற்றில் மொத்தம் 845 அறைகள் உள்ளன. இங்கு, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுலா பயணத்திட்டங்களை மேற்கொள்ள 14 சொகுசு பேருந்துகள் உள்ளன. கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில், 83 ஆயிரத்து 897 பேர் திருப்பதி சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களில் மட்டும் 40,248 பேர் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 36,636 பேர் திருப்பதி சுற்றுலா சென்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கா.ராமசந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT