Published : 14 Nov 2017 09:51 AM
Last Updated : 14 Nov 2017 09:51 AM

வடபழனி – பூவிருந்தவல்லி இடையே மெட்ரோ ரயில் 4-வது திட்டம்: விரிவான திட்ட அறிக்கை பணி 4 மாதங்களில் முடியும்

வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி அடுத்த 4 மாதங்களில் முடியும். எந்தெந்த இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட விபரங்கள் இதில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையின் 2-வது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 107.55 கி.மீட்டருக்கு ரூ.85,047 கோடிக்கு திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இதற்கிடையே, வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: முதல்கட்டமாக தற்போது நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். அடுத்தகட்டமாக, சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் 4 மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய மெட்ரோ ரயில் கொள்கையின்படி, பணிகள் மேற்கொள் ளப்படும்.

வடபழனி – பூவிருந்தவல்லி வரையில் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தெந்த இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது, நிலம் கையகப்படுத்த வாய்ப்புள்ள இடங்கள், எந்தெந்த இடங்களில் உயர்மட்ட அல்லது சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதை அமைப்பது உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெறும். அடுத்த 4 மாதங்களில் இதற்கான முழு பணிகளும் முடியும். இதையடுத்து, தமிழக அரசு மூலம் மத் திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x