மதுராந்தகம் தொகுதியில் 106 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Updated on: 
1 min read

மதுராந்தகம்: மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்​தலை​யொட்​டி, தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் 106 பேர் தங்​களது துப்​பாக்​கி​களை போலீஸிடம் ஒப்​படைத்​துள்​ளனர்.

மது​ராந்​தகம் ​தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் மேற்​பார்​வை​யாளர் (பொது) போர் சிங் யாதவ், (7200983704), தேர்​தல் மேற்​பார்​வை​யாளர் (காவல்) கிரிஜா சங்​கர் ஜெய்​ஸ்​வால் (9894582390), தேர்​தல் செல​வின மேற்​பார்​வை​யாளர் வாவல் வைபவ் பாலா​சாகேப் ​(7200964217) ஆகியோர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், மது​ராந்​தகம் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்ள துப்​பாக்​கி​ உரிமம் பெற்றவர்கள் வரு​வாய்த் துறை மற்றும் காவல்​துறை​யிடம் ஒப்படைக்​கும் பணி​கள் நடை​பெற்றுவரு​கின்றன. இதன்படி மது​ராந்​தகத்தில் தற்​போது 106 பேர் தங்​களிட​மிருந்த துப்​பாக்​கி​களை வரு​வாய்த் துறை மற்​றும் காவல் துறை​யிடம் வழங்​கி​யுள்​ள​தாக மாவட்ட தேர்​தல் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. மேலும், இடைத்​தேர்​தலை​யொட்டி பல்​வேறு பாது​காப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக மாவட்ட நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

மதுராந்தகம் தொகுதியில் 106 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in