Published : 25 Nov 2017 10:47 AM
Last Updated : 25 Nov 2017 10:47 AM

தமிழக பணிக்கு திரும்பிய பிரதமரின் கூடுதல் செயலர்

பிரதமர் மோடியின் கூடுதல் செயலராக இருந்த டி.வி.சோமநாதன் தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக அதிகாரியாக பணியாற்றிய ஓடெம் டே, தமிழக அரசு பணிக்கு வந்ததை தொடர்ந்து அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் அசோக் டோங்ரே, தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் கூடுதல் செயலராக இருந்த டி.வி.சோமநாதன், தமிழக அரசு பணிக்கு வந்ததை தொடர்ந்து அவர், திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராக இருந்த பி.செந்தில்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x