Published : 27 Nov 2017 10:27 AM
Last Updated : 27 Nov 2017 10:27 AM

பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு பிரசாரம்

செங்கல்பட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக பெண்கள் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் நவ.25-ம் முதல் டிசம்பர் 10-ம் தேதிவரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், அநீதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.

இதில் சிறார் திருமணம், பெண் சிசுக் கொலை, காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல், குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை ஆகியவற்றுக்கு கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நாடகம், துண்டுப்பிரசுரம், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் பெண்கள் அனைவரும் வன்கொடுமை, அநீதிகளுக்கு எதிராக போராட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை விவரித்ததோடு, திருமணமான பெண்கள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்ய தவறுவதே குடும்ப வன்முறைக்கு முதல் இலக்காக அமைகிறது என்று, மத்திய அரசு கொண்டு வந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் குறித்து தமிழக பெண்கள் இயக்க ஆலோசகர் ஆர்.வசந்தா விளக்கினர்.

தமிழக பெண்கள் இயக்க நிர்வாகிகள் ராஜம்மாள், வள்ளி கோபால், செல்வம், வழக்கறிஞர் சந்தகுமாரி. நிர்மலா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x