பெங்களூருவில் மேகதாது அணை குறித்துப் பேசாத முதல்வர் ஸ்டாலின்: கும்பகோணத்தில் பாஜகவினர் எதிர்ப்பு

பெங்களூருவில் மேகதாது அணை குறித்துப் பேசாத முதல்வர் ஸ்டாலின்: கும்பகோணத்தில் பாஜகவினர் எதிர்ப்பு
Updated on
1 min read

கும்பகோணம்: கர்நாடகாவில் மேகதாது அணை குறித்துப் பேசாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து கும்பகோணத்தில் கருப்புச் சட்டை அணிந்து பாஜகவினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கும்பகோணத்தில் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது," பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடகா மாநில துணை முதல்வர், மேகதாதுவில் அணை கட்டுவதாகப் பேசியுள்ளார். ஆனால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக பேசாமல், கூட்டணியை மட்டும் பேசியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டம் தான் முதலில் பாதிக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து தமிழகத்தில் காவிரி, மீனவர்,ஜல்லிக்கட்டு ஆகிய 3 பிரச்சினைகளை பற்றிப் பேசுவார்கள். ஆனால் இந்த 3 பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தது பிரதமர் மோடி தான்.

காங்கிரஸ் கட்சியும், ஆளும் திமுக அரசும், தமிழகத்தில் மீண்டும் காவிரி பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். அடுத்ததாக தொடர்ந்து வேறு பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாகப் பேசாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து பாஜகவினர் கருப்பு சட்டை, துண்டு அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in