Published : 18 Jul 2023 06:08 AM
Last Updated : 18 Jul 2023 06:08 AM
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரை தாக்கி பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டதாக சிதம்பரம் நகர் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜுதீன் கடந்த ஜூன் 28-ம் தேதி அளித்த புகாரின்பேரில், அந்தசெய்தி நிறுவனத்தின் இயக்குநரும், பாஜக மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஜி.சூர்யா தினமும் காலை, மாலை என 2 வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்என்ற நிபந்தனையுடன் அவருக்குமுன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT