Published : 18 Jul 2023 06:18 AM
Last Updated : 18 Jul 2023 06:18 AM

நாற்றத்தை மறக்க மது தீர்வா? - அமைச்சர் முத்துசாமிக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சாக்கடை தூய்மைப் பணியாளர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.

சாக்கடைகளை தூய்மைப்படுத்தும்போது நாற்றத்தை சகித்துக் கொள்ளமுடியாது என்பது உண்மைதான். சாக்கடைத் தூய்மை உள்ளிட்ட பணிகளை இயந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவதுதான் சமூக நீதி.

மாறாக, தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று கூறுவது மது நீதி. அது ஆபத்தானது. நாற்றத்தை மறக்க மதுதான் தீர்வு என்றால், மது அருந்திவிட்டு, அதைவிட கொடும் நாற்றத்துடன் வீட்டுக்கு வரும் கணவரை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவி அனுபவிக்கும் கொடுமைக்கு, அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்? இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x