தமிழகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.89 லட்சம்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் 10 உப கோயில்களில் பக்தர்கள் செலுத் திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் ந.சுரேஷ், கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை வடக்கு மற்றும் தெற்கு ஆய்வர்கள், வங்கிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 556 கிராம் தங்கம், 5,128 கிராம் வெள்ளி, ரூ.89 லட்சத்து 92 ஆயிரத்து 56 மற்றும் 321 வெளி நாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.
