சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தெற்கு ரயில்வேயில் திருச்சிபொன்மலை, பெரம்பூர் கேரேஜ்,ஆவடி பணிமனை ஆகியவை இணைந்து, நீராவி இன்ஜின் வடிவில் மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரயிலை வடிவமைத்துள்ளன. சென்னை சென்ட்ரல்ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அண்மையில் பார்வையிட்டார்.

அப்போது, ‘‘இந்த ரயில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதன்பிறகு, சுற்றுலா இடங்களுக்கு இந்த ரயில் அனுப்பி வைக்கப்படும். 3 மாதத்துக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’’ என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே நீராவி இன்ஜின் வடிவிலான மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்து ஆய்வு செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு புறப்பட்ட சுற்றுலா ரயில், பகல் 12 மணிக்கு புதுச்சேரியை அடைந்தது.

புதுச்சேரியில் இருந்து மாலை4 மணிக்கு புறப்பட்டு, இரவுசென்னை எழும்பூரை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், இதன்மூலம் ரயிலின் வேகம், ரயில் நிறுத்தங்களை தேர்வு செய்வது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in