

கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார் என நடிகர் கமல்ஹாசனை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
"இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்கள் இனியும் சொல்லிக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் இந்து வலதுசாரி அமைப்புகள் எதிர் தரப்பினருடன் விவாதங்களில் ஈடுபடுவர் ஆனால் இப்போது வன்முறையில் ஈடுபடுகின்றனர்" என நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு ப்ரமோட் ஆகி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். 'விஸ்வரூபம்' பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீதான தாக்குதல் வெட்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், 'மெர்சல்' விவகாரத்துக்காக நடிகர் விஜய்யை குறிவைத்து ஹெச்.ராஜா விமர்சனங்களைப் பதிவு செய்திருந்தார். தற்போது, அவர் கமல்ஹாசனை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.