Published : 27 Nov 2017 10:11 AM
Last Updated : 27 Nov 2017 10:11 AM

வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜப்பான் பயணம்

இன்று (நவ.27) நடைபெறவுள்ள வானிலை குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் ஜப்பான் சென்றுள்ளார்.

உலக வானிலை நிறுவனம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெற்காசிய நாடுகள் மத்தியில் வானிலை நிலவரங்கள் தொடர் பான ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கருத்தரங் கம் ஜப்பானில் இன்று நடக்கிறது. இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பங்கேற்று, தற்போதைய வானிலை தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இதில் இந்தியா சார்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

மாலத்தீவு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு தனியாக வானிலை ஆய்வு மையங்கள் இல்லை. இந்திய வானிலை ஆய்வு மையம்தான் கண்காணித்து, வானிலை விவரங்களை தெரிவித்து உதவி வருகிறது. அவர்கள், எத்தகைய வானிலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து கருத்தரங்கில் தெரிவிப்பார்கள்.

கருத்தரங்கு

இந்த கருத்தரங்கில், வானிலை நிலவரத்தை கணிப்பது, அதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கைக்கோள்கள், ரேடார்கள், இதர உபகரணங்கள், புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும் வானிலை முன்னறிவிப்பை பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக் கும் விதம் குறித்தும், வார்தா புயலின்போது சென்னை வானிலை ஆய்வு மையம் செயல்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்தும் அந்த கருத்தரங்கில் நான் பேசவுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x