

ஏனைய மாநிலங்களை காட்டிலும், தமிழகம் சில நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இருப்பினும், தமிழக அரசிலும் குறைகள் உள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
பாஜக அரசு, தேசிய அடிப்படை யிலான கொள்கைகளை மாற்று வதற்கு முயற்சி செய்கிறது. ராணு வத்தில் அந்நிய முதலீட்டை அனு மதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலா கும். லாபத்தில் இயங்கும் காப்பீடு, வங்கி துறை ஆகியவற்றை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கைது செய் யப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களை தடுக்க கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும். இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி வழங்கக் கூடாது.
மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத் தக்கது. பிற மொழி பேசுபவர்களை இது அவமதிக்கும் செயலாக உள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் ஏற்பட்டுள்ள தீர்வை கேரள அரசு ஏற்க வேண் டும். இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுடன், அணை யின் நீர்மட்டத்தை 156 அடியாக உயர்த்த வேண்டுமென்ற தமிழக அரசின் மனுவையும் பரிசீலனை செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் மேலாண்மை குழுவை அமைத்து, உடனடியாக தமிழகத்துக்கு நீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழ கத்தில் பருவமழை பொய்த்துள் ளதால், வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயி, விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலைப் போல், இடதுசாரி இயக்கங்கள் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். கொள்கை அடிப்படை யில் மக்கள் நலன் என்ற கருத்தில் இணைய விரும்பும் கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்போம். அது எந்த கட்சி என்று இப்போது சொல்ல முடியாது.
ஏனைய மாநிலங்களைக் காட்டிலும், தமிழகம் சில நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இருப்பினும், தமிழக அரசிலும் குறைகள் உள்ளன என்றார்.